ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில்
ஓம் சக்தி
அகிலம் எங்கும் வியாபித்து நிற்கும் அன்னையின் அருள் இன்றி ஓர் அணுவும் அசையாது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அன்னையின் அருளைப் பெறவேண்டி துதித்து நிற்கும் அன்பர்களே! கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருமுகத்தை காண வாருங்கள்!!
அனைவரின் மனமும் மகிழ்ந்திட சகல செல்வங்களும் பெற்று பேரும் புகழுடனும் வாழ வழி வகுத்து வளமான வாழ்வளிப்பவளாம் இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரில் ஸ்ரீ கதிரேசன் வீதியில் திருக்கோவில் கொண்டு சிறிய இடத்திலே வீற்றிருந்து அளவிடமுடியா சக்தியாக எண்ணற்ற பெரும் அற்புதங்களை செய்து கொண்டிருக்கின்றாள். கருணையே வடிவான அன்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்மனும் அன்னை ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியும் இத்தகைய அன்னையின் திருவருளையும் கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகளின் குருவருளையும் பெற்று இன்புற அனைவரும் வாருங்கள் அருள்மாரி பொழியும் கருமாரி அருளைப் பெற்று நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க!
சிறப்பு விருந்தினர்கள்
நன்கொடை
பூஜை முன்பதிவு
சேவை முன்பதிவு
ஆலயத்தின் ஆரம்ப நிலை
அன்னையின் அடியார்களே!
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை வணங்கி செல்லும் இவ்வாலயம் 40 வருடங்களுக்கு முன்னால் தவத்திரு கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்தாஸ் சுவாமிகள் வாழ்ந்த இல்லம் ஆகும். சுவாமிகள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு நாஸ்திகனாகவே வாழ்ந்தார். அவரின் குடும்பத்தாரோ அன்னையின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்கள் சுவாமிகள் தன்னுடைய தாயை தவிர வேறு தெய்வம் இல்லை என்ற கருத்தைக் கொண்டவர். எனினும் தன்னுடைய தாயின் மறைவுக்குப் பின்னால் சுவாமிகள் ஆஸ்திகத்தை உணரத் தொடங்கினார் அன்னை கருமாரி அவரை ஆட்கொண்டு அவர் மூலம் பல பக்தர்களின் இன்னல்களை தீர்த்து வந்தாள். சுவாமிகள் தனது இல்லத்தில் அன்னையின் திருவுருவப் படத்தை வைத்து வணங்கி வந்தார். பக்தர்களின் வருகையும் அதிகரித்தது இவ்வில்லத்தில் முதன் முதலாக மண்ணால் செய்யப்பட்ட அன்னையின் திருவுருவ சிலையை சுவாமிகள் அமர்த்தினார். அன்னை “நான் இங்கு இருக்கின்றேன்” என்று அச்சிலையின் மூலம் பல அற்புதங்களை பக்தர்களுக்கு நிகழ்த்தினாள்.
ஆலயம் அமைய இருக்கும் நிலை
தவத்திரு கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகள் அன்னை கருமாரி தேவிக்கு 108 படியுடன் ஆலயம் அமைத்து அதன் மூலம் பல மக்களுக்கு சேவைகளை செய்ய வேண்டும் என்பதே சுவாமிகளின் கனவு. அவரின் என்னப்படியே இன்று ஆலயம் தோற்றம் பெற்றுவருகின்றது மக்களுக்காகவே அன்னை கருமாரி ஆலயம் அமையும். திருப்பணி நிறைவுற்ற பின்னால் பக்தர்களுக்கு புரியும் கருமாரி ஆலயம் அனைவருக்கும் ஒரு தாய் வீடு என்பது.
எதிர்வரும் செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்
அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அன்னையின் அருட்சிறப்பு
இயற்கையையே இயைபாகக் கொண்டு விளங்கும் நாடாம், சீதோசன நிலையில் சீராய் விளங்கும் வியத்தகு நாடாம், நாற்பக்கமும் கடலால் சூழ்ந்த நவரத்தினம் போல் விளங்கும் அழகிய நாடாம் எனப் பல வர்ணனைகளைக் கொண்டுள்ள இலங்கை மணித்திருநாட்டில் தலைநகராம் கொழும்பில் தலைமுறை தவறாமல் தனித்துவமாய் தன்னிகரில்லா அருளாட்சி புரிகின்றாள் ஸ்ரீ கதிரேசன்பதி அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியன்னை. ஆமாம் இன்று ஆறாம் தலைமுறையாக அன்னை தன் அருளை பக்த கோடிகளுக்கு வழங்குகின்றாள்.
அருள்மிகு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியின் அருட்சிறப்பு
“பத்ரம்” என்றால் “மங்களம்” என்று பொருள். சக்தியானவள் பக்தர்களுக்கு என்றும் மங்களத்தையே அருளுபவள் ஆதலால் சக்திக்கு “பத்ரகாளி” என்ற பெயர் ஏற்பட்டது. இப் பத்ரகாளி அம்மனே பிரத்யங்கிரா தேவியும் ஆவாள். பிரத்தியங்கிராஸ், அங்கிரஸ் எனும் ரிஷிகள் இக்காளி தேவியின் மந்திரத்தினை கண்டு பிடித்ததால் இவரது பெயரினையும் இணைத்து பிரத்தியங்கிரா தேவி என்று அழைக்கப்படுகிறாள்.