அருள்மிகு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியின் அருட்சிறப்பு

“பத்ரம்” என்றால் “மங்களம்”  என்று பொருள். சக்தியானவள் பக்தர்களுக்கு என்றும் மங்களத்தையே அருளுபவள் ஆதலால் சக்திக்கு “பத்ரகாளி” என்ற பெயர் ஏற்பட்டது. இப் பத்ரகாளி அம்மனே பிரத்யங்கிரா தேவியும் ஆவாள். பிரத்தியங்கிராஸ், அங்கிரஸ் எனும் ரிஷிகள் இக்காளி தேவியின் மந்திரத்தினை கண்டு பிடித்ததால் இவரது பெயரினையும் இணைத்து பிரத்தியங்கிரா தேவி என்று அழைக்கப்படுகிறாள்.

அன்னையை வணங்கியவாறு திருப்பாதத்தில் இருப்பவர்களே அவ்விரு ரிஷிகளும் ஆவார்கள். பிரத்தியங்கிரா தேவி தன் அருள் புரியும் தன்மை காரணமாக வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகின்றாள் அன்னை ஓங்கார ரூபிணியாக இருந்து பக்தர்களை நவக்கிரஹங்களின் பாதிப்பிலிருந்து காப்பதால் “நவக்கிரகரூபிண்யை” என்றும் கூறுவார்கள். பக்தர்கள் இவ் அன்னையை பத்ரகாளி என்றே வணங்கலாம். தன்னை துதிப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என பாராமல் வரம் அளிப்பவள். அதே சமயத்தில் தன்னிடம் வரம் பெற்றவர்கள் அவ்வரத்தின் பலனாள் தீவினைகளில் ஈடுபடுவார்களேயானால் தானே முன்னின்று அவர்களை வதம் செய்து அழித்திடும் சக்தியுள்ளவளும் ஆவாள்.

இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி எமது ஆலயத்தில் எழுந்தருளியுள்ளால். அன்னையை பயபக்தியோடு நம்பிக்கையுடன் வணங்கினால் கிடைக்கும் பலன்கள் இல்லங்களில் அமைதி தழுவும், செல்வம் பெருகும், சத்ருக்களின் பயம் நீங்கும், பகைவர்களை நாசம் செய்வாள், பேய், பில்லி, சூனியம். ஏவல் போன்ற மந்திரத் தீவினைகளை அளித்து தன்னை நம்பி வரும் பக்தர்களை காத்தருள்வாய். இவ் அன்னையின் திருவருட்சிலை 2006 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது 6 அடி உயரமான ஐம்பொன் விக்ரகமாக அமைந்த இச் சிலைவடிவில் அன்னை ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி காட்சி தருகிறாள்.